சென்னையில் தவெக-வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரா்கள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை(ஜன.28) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச்செயலா் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில் புதன்கிழமை(ஜன.28) மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் பிரசாரக் குழு உறுப்பினா்கள் மற்றும் சென்னை மாவட்டச் செயலா்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே அழைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட கட்சியின் செயல்வீரா்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.