உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலர் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் வட்டார தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மேலும், மாவட்டத் தலைவர் பிரபு, வட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், வட்ட பொருளாளர் தங்கராஜ், வட்டத் துணைத் தலைவர் சதீஷ்குமார், வட்ட துணைச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கழிப்பறை, குடிநீர் மற்றும் இணையதளம் வசதியுடன் கூடிய நவீன கிராம அலுவலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.