இரண்டாவதாக நடந்த தர்மயுத்தத்துக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாங்கள் தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் தேர்தலில் போட்டியிடுவதும் குறித்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
நான் திமுகவில் சேரவுள்ளதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. 2வது தர்மயுத்தத்துக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்தான் காரணம்.
தேனி மாவட்ட நிர்வாகிகள் எங்கும் செல்லவில்லை, இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களின் மனதின் குரல்களை தெரிந்துகொள்ள கூட்டம் கூட்டப்பட்டது. தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட தொண்டர்கள் தயார் என்று கூறியிருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தினகரன் நட்பின் காரணமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.
எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். டிடிவி தினகரனும் அந்தக் கோரிக்கையை அங்கு வலியுறுத்தினால், நாங்கள் இணையலாம். அந்த வேலையை செய்தால் அதிமுக மாபெரும் வெற்றியடையும்.
என் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவே ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக 6 ஓபிஎஸ்-களை தேர்தலில் நிறுத்தினர். நான் தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட சதி மற்றும் சூழ்ச்சி அது.
கட்சியில் மீண்டும் ஒன்று சேர நான் ரெடி, தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? கேட்டுச் சொல்லங்கள்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.