தவெக தலைவர் விஜய் படம்: PTI
தமிழ்நாடு

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா நடைபெறவுள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா வரும் பிப். 2 ஆம் தேதி விஜய் தலைமையில் பனையூரில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

”தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. தவெகவை நம் வெற்றித் தலைவர் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கான நம் தலைவரின் முன்னெடுப்புகள், மிக முக்கியமானவை. ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தன் மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, நம் தலைவர் அத்தனைத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாகக் களமாடி வருகிறார். நம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். நம் வெற்றித் தலைவர் தலைமையில் 'தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா' சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி, நமது தவெக தலைமை நிலையச் செயலகத்தில், வரும் பிப். 2 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதை தவெக தலைவரின் ஒப்புதலோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களுக்காக உழைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று, நம் வெற்றித் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்” என்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

The third-anniversary celebration of the Tamilaga Vetri Kazhagam will be held on February 2nd in Panaiyur, under the leadership of Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் பேச்சுவார்த்தையா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

அருமை அண்ணன் இபிஎஸ்... தர்மயுத்தத்துக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்தான் காரணம்: ஓபிஎஸ் பரபரப்பு!

SCROLL FOR NEXT