பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 அன்று வெளியிடப்பட்டது.
19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ய படிவம்–6ஐ நிரப்பி உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) விண்ணப்பித்துள்ளனர். முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம்-7ஐ சமர்ப்பித்துள்ளனர்.
முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய / மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்–8 மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
19.12.2025 முதல் 30.1.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், பின்வரும் எண்ணிக்கையிலான படிவங்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளன.
மேலும், இதே காலகட்டத்தில் பின்வரும் எண்ணிக்கையிலான இணையவழி படிவங்களும் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட 34,75,717 விண்ணப்பங்களும் (நேரடி மற்றும் இணையவழி) மாவட்ட அளவில் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO) மூலம் செயலாக்கப்பட்டு, அதன் பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் 17 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.