நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கை, நந்தன் கால்வாய் திட்டம். சாத்தனூர் அணையின் உபரிநீர் தென்பெண்ணை ஆறு மூலமாக கடலில் கலப்பதைத் தடுத்து அதை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமாகும்.
இதற்கு சாத்தனூர் அணையில் இருந்து 23 கிமீ நீள ஊடு கால்வாய் மூலமாக நந்தன் கால்வாயுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
செஞ்சி, விக்ரவாண்டி, திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இது இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திட்டத்துக்கான நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.