மேக்கேதாட்டு விவகாரம்! தமிழ் மண்ணின் உரிமையில் சமரசம் இல்லை: அமைச்சர் ராஜேஷ் குமார்
மேக்கேதாட்டு விவகாரத்தில் எப்போதும் சமரசம் இல்லை என அமைச்சர் ராஜேஷ் குமார் கூறியது பற்றி...
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் உறுதியளித்துள்ளார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜேஷ் குமார் பேசியதாவது, "மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டோம்.
எங்கள் கட்சியின் நிலைப்பாடு இதுதான் - இது எங்களுடைய உரிமை; தமிழ் மக்களுடைய உரிமை; தமிழ் மண்ணின் உரிமை. இதில் எந்தக் காலத்திலும் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். தமிழக மக்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம்.
Advertisement
Advertisement
நாங்கள் ஒரு தேசிய கட்சியாக இருந்தபோதிலும், எங்களைப் பொருத்தவரையில் மாநில மக்களின் நலனைத்தான் கருத்தில் கொள்வோம்.
காவிரிப் படுகையிலிருந்து மேலிருந்துதான் நீர் வரவேண்டும். ஏற்கெனவே மழைக் காலங்களில் உபரி நீர்தான் வருகிறது. இதில் அணை கட்டப்பட்டால் நீரே கிடைக்காது.
தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்; விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆகையால், எந்தக் காலகட்டத்திலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதில் ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெளிவானத் தீர்ப்புகளைத் தந்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, எந்த அரசும் செயல்பட முடியாது.
இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருப்பதுபோல், நாங்களும் எங்கள் விஷயத்தில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
No compromise on the Mekedatu issue, says Congress Minister Rajesh Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.