முகப்பு
தமிழ்நாடு

மன்னார்குடி அருகே உடும்பு பிடிக்கத் தோண்டியபோது சிக்கிய 9 உலோக சாமி சிலைகள்!

மன்னார்குடி அருகே 9 உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 3 ஜூலை 2026, 11:08 am IST
பூமிக்குள் புதைந்திருந்து கண்டெடுக்கப்பட்ட 9 சாமி சிலைகள் - DIN
பகிர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இரண்டு நபர்கள் இரவில் உடும்பு பிடிக்க புதரைத் தோண்டியபோது அடுத்தடுத்து 9 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

மன்னார்குடி அடுத்த பாமணி கிராமம் நரிக்குறவர் காலனி தெருவைச் சேர்ந்தவ ஜெய்கணேஷ், சின்னதுரை ஆகியோர் இரவில் உடும்பு பிடிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயில் பின்புறம் சென்றுள்ளனர். அப்போது உடும்பு ஒன்று புதற்குள் புகுந்துள்ளது. இதனை அறிந்த சின்னதுரை, ஜெய்கணேஷ் ஆகியோர் இரும்பு பாறை கொண்டு புதரை தோண்டியபோது இரும்பு பொருள்களில் உரசியதுபோல வேகமாக சத்தம் கேட்டுள்ளது. இதனை அறிந்த, இருவரும் புதரை தோண்டிய போது சாமி முகத்துடன் சிலை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அதன்பிறகு அந்த பகுதியச் சேர்ந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அந்த இடத்திற்கு வந்த மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆர். யோகேஸ்வரன், வட்டாட்சியர் நக்கீரன் ஆகியோர் சாமி சிலைகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

Advertisement

Advertisement

பின்னர், ஜேசிபி இயந்திரத்தை கொண்டு புதர்களை தோண்டியபோது 3 அடி கொண்ட நடராஜர் சிலை, பெருமாள், விஷ்ணு, அம்மன் சிலைகள், பீடம் உள்ளிட்ட அடுத்தடுத்து 9 சிலைகள் உள்ளிட்ட சாமி பொருள்கள் பூமிக்குள் புதைந்திருந்தது கண்டெடுக்கப்பட்டன.

இந்த சிலைகள், மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொல்லியல் துறைக்கு தகவல் ஆய்வு செய்த பிறகு இது வெண்கல சிலையா, இல்லை ஐம்பொன் சிலையா என தெரியவரும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

summary

Nine metal deity idols found near Mannargudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments