பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் காதல் தம்பதி சடலங்கள்: போலீசார் விசாரணை
திருப்பூரில் காதல் தம்பதி இருவர் அழுகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து...
திருப்பூரில் காதல் தம்பதி இருவர் அழுகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த முகாம்பிகை நகர் இரண்டாவது வீதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கடுமையாக துர்நாற்றம் வீசுவதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இரவு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஆண் ஒருவர் தூக்கிய தொங்கிய படியும் அழுகிய நிலையில் கிடந்துள்ளனர்.
Advertisement
Advertisement
உடனடியாக போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (27), ஶ்ரீமதி (19) என்பதும் இவர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூர் கருமாரம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.
மேலும் வெல்டிங் தொழிலாளியான சரவணக்குமார், திருப்பூரில் உள்ள வெல்டிங் ஒர்க்ஷாப்பில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் பி.எஸ்சி (நர்சிங்) படித்த ஶ்ரீமதி வேலை செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
நாம் காதல் திருமணம் செய்து கொண்டோமே நீயும் வேலைக்கு சென்றால் குடும்ப பிரச்னைகளில் இருந்து எளிதில் மீள முடியும் என சரவணக்குமார் அடிக்கடி ஶ்ரீமதியுடன் சண்டையிட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த தகராறில் காதல் மனைவியை சரவணக்குமார் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bodies of a couple in a decomposed state recovered in Tiruppur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.