முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 6 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 6 ஜூலை 2026, 11:53 am IST
நெய்மர்
பகிர்:
Updated On : 6 ஜூலை 2026, 11:53 am IST

பிரதமர் மோடி புறப்பட்டார்

பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Updated On : 6 ஜூலை 2026, 11:53 am IST

கரூர் பலி - நாளை விசாரணை!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய் உள்ளிட்டோருக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Updated On : 6 ஜூலை 2026, 11:49 am IST

இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Updated On : 6 ஜூலை 2026, 11:48 am IST

தவெக கூட்டணியில் விசிக

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 ஜூலை 2026, 11:25 am IST

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைன் தலைநகரை குறைத்து ரஷியா நடத்திய ஏவுகனை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

Updated On : 6 ஜூலை 2026, 11:24 am IST

நிலச்சரிவு: மும்பை - புணே ரயில் சேவை பாதிப்பு

கனமழை காரணமாக ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மும்பை- புணே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜூலை 2026, 10:29 am IST

பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி

பழனிமலை முருகன் கோயிலில், ஆறு கால பூஜைகளில் பங்கேற்கவும், ரோப் காரில் செல்லவும் கோயிலின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கியது. 

Updated On : 6 ஜூலை 2026, 10:27 am IST

தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026)

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.

Updated On : 6 ஜூலை 2026, 10:26 am IST

மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!

மும்பையில் கனமழைக்கு 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 6 ஜூலை 2026, 10:25 am IST

ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்!

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments