முகப்பு
தமிழ்நாடு

தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 8:05 pm IST
விஜி சரவணன்.
பகிர்:

பேரம் பேசிய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ. விஜி சரவணனுக்கு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, ரூ. 35 கோடி சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், 15 தவெக எம்எல்ஏக்களை ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்வதன் மூலம் தவெக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் நிலையில், திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, நாளை (ஜூலை 8) விசாரணைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், திமுகவுக்கு ஆதரவளித்தால் ரூ. 50 கோடி தருவதாகக் கூறியதாக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. வி.ஜி. சரவணன் நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

summary

Armed police protection has been provided to a Tamizhaga Vettri Kazhagam MLA in connection with a matter involving negotiations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments