கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் நீர்மோர்ப் பந்தல்கள் திறக்க வேண்டும் எனக் கட்சியின் பொதுச்செயலர் என். ஆனந்த் வேண்டுகோள்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் நீர்மோர்ப் பந்தல்கள் திறக்க வேண்டும் எனக் கட்சியின் பொதுச்செயலர் என். ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது அமைச்சரும் தவெக பொதுச் செயலருமான என். ஆனந்த் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வெளியே வருவோருக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு, மக்களுக்கு அவசியம் தேவை.
Advertisement
Advertisement
இந்த வெக்கையைச் சமாளிக்க, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கழக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் நீர்மோர்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும்.
பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
N. Anand, the General Secretary of the Tamilaga Vettri Kazhagam, has appealed to party members to set up buttermilk stalls.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.