FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த்

புதுச்சேரியில் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிக்கில்பால் திடல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் என். ஆனந்த் பேச்சு....

Updated On : 11 ஜூலை 2026, 5:07 pm IST
அமைச்சர் என். ஆனந்த்
பகிர்:

அடுத்த 20 ஆண்டுகளும் விஜய்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார் என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் பள்ளி ஒன்றில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிக்கில்பால் திடல் திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என். ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகனும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அன்பழகன் பேசும்போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. ஆனந்தின் விசுவாசம்தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. அதுமாதிரி பிற கட்சியில் விசுவாசமாக இருப்பவர்களை மனம் மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் என். ஆனந்த், சரியா நீங்க வைத்திருந்தால் அவர்கள் ஏன் இன்னொரு இடத்துக்கு வருகிறார்கள். நீங்க ஒழுங்காக வைக்காத காரணத்தினால் தான் எந்த இடம் நல்ல இடம் என்று எந்த இடம் ஊழல் இல்லாத இடம் என்று தெரிந்து எங்களிடம் அவர்கள் வருகின்றனர்.

நான் எனது தொகுதியில் 4 நாள்கள்தான் பிரசாரம் செய்தேன். எனக்காக யாரும் ஓட்டுப்போடவில்லை. எல்லாம் விஜய்க்காகதான் விழுந்த ஓட்டு. புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்த நான் இன்று அமைச்சராக இருக்கிறேன் என்றால் அதற்கு தமிழ்நாடு முதல்வர் விஜய்தான் காரணம்.

தமிழ்நாடு முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஒரு தவறும் செய்யாமல் எங்களுடைய ஆட்சி தமிழ்நாட்டில் தொடரும். ஐந்து வருடங்கள் மட்டுமில்லை 15, 20 வருடங்கள் ஆனாலும் எங்களுடைய விஜய்தான் முதல்வராக இருப்பார் என உறுதிப்பட தெரிவித்தார்.

summary

Minister N. Anand stated that Vijay will be the Chief Minister of Tamil Nadu for the next 20 years as well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments