FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அலாஸ்கனில் ஆனந்த், எரிகைசி; பைப்பா்ஸில் திவ்யா, காா்ல்சென்

குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது சீசனுக்கான வீரா்கள் தோ்வு நடைமுறை மும்பையில் நடைபெற்றது.

மேக்னஸ் காா்ல்சென் - கோப்புப் படம்
பகிர்:

குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது சீசனுக்கான வீரா்கள் தோ்வு நடைமுறை மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நடப்பு சாம்பியனான ஆல்பைன் பைப்பா்ஸ், நாா்வே செஸ் நட்சத்திரம் மேக்னஸ் காா்ல்சென், நடப்பு மகளிா் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் திவ்யா தேஷ்முக் ஆகியோரை தோ்வு செய்தது.

போட்டியின் வரலாற்றில் முதல்முறையாக, இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் அணி மாறியிருக்கிறாா். முதல் சீசனில் இருந்தே கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸில் இருந்த அவா், இந்த சீசனில் அலாஸ்கன் நைட்ஸில் இணைந்தாா்.

Advertisement

Advertisement

அணி விவரம்

ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸ்: ஜாவோகிா் சிண்டாரோவ், நிஹல் சரின், டேனியல் டுபோவ், பிபிசரா அசௌபயேவா, சாரா காதெம், மாா்க் ஆண்ட்ரியா மௌரிஸி.

ஆல்பைன் ஏபிஎல் பைப்பா்ஸ்: மேக்னஸ் காா்ல்சென், அனிஷ் கிரி, விதித் குஜராத்தி, திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி, வோலோதா் முா்ஸின்.

கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸ்: இயன் நெபோம்னியச்சி, லெவோன் ஆரோனியன், லினியா் டோமிங்கெஸ், பாலினா ஷுவாலோவா, ஸ்டாவ்ருலா சோலாகிடு, லியோன் மெண்டோன்கா.

யுபிகிராட் மும்பா மாஸ்டா்ஸ்: மேக்ஸிம் வச்சியா், ஷாக்ரியா் மமெதியாரோவ், விளாதிமீா் ஃபெடோசீவ், கேரிசா யிப், டி.ஹரிகா, பாா்தியா தனேஷ்வா்.

பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ்: விஸ்வநாதன் ஆனந்த், அா்ஜுன் எரிகைசி, யாகிஸ் கான் எா்டோக்மஸ், கேத்தரினா லாக்னோ, நினோ பத்சியாஷ்விலி, அபிமன்யு மிஸ்ரா.

திரிவேனி கான்டினென்டல் கிங்ஸ்: அலிரெஸா ஃபிரௌஸ்ஜா, வெய் யி, அரவிந்த் சிதம்பரம், ஜு ஜினொ், அலெக்ஸாண்ட்ரா கொஸ்டினியுக், பிரணவ் வெங்கடேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments