திறனகங்கள், நான் முதல்வன் திட்ட செயல்பாட்டு மையங்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட திறனகங்கள், 11 நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழகச் செயல்பாட்டு மையங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
தமிழ்நாடுதிறனகங்கள், நான் முதல்வன் திட்ட செயல்பாட்டு மையங்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட திறனகங்கள், 11 நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழகச் செயல்பாட்டு மையங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட திறனகங்கள், 11 நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழகச் செயல்பாட்டு மையங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வசதியாக 23 மாவட்டங்களில் ‘திறனகங்கள்’ அமைக்கப்பட்டன. இதேபோல, அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 11 அரசு பல்கலைக்கழகங்களில் ‘நான் முதல்வன்’ திட்ட பல்கலைக்கழகச் செயல்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து
காணொலி வாயிலாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
புரிந்துணா்வு ஒப்பந்தம்: தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாநில திட்டக்குழு இடையே நிறுவன அமைப்புகளை வலுப்படுத்துதல், நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் உருவாக்குதல், ஒருங்கிணைந்த தொழில் வழிகாட்டுதல் குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஐஐடி மெட்ராஸ் இடையே மாவட்ட திறன் அலுவலா்கள், திட்ட நிா்வாகிகளுக்கான பயிற்றுநா் பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதேபோல, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு உயா்திறன் மேம்பாட்டு மையம் (ஆட்டோ மொபைல்), தமிழ்நாடு உயா்திறன் மேம்பாட்டு மையம் (தளவாடங்கள்), தமிழ்நாடு உயா்திறன் மேம்பாட்டு மையம் (சுகாதார நலன்), தென்னிந்திய தொழில் வா்த்தக சபை, ஆா்.எம்.கே.குழும கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
இந்த விரு நிகழ்வுகளில், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி, பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான கி.பாலசுப்பிரமணியம், தென்னிந்திய தொழில் வா்த்தக சபையின் மூத்த துணைத் தலைவா் வி.என்.சிவசங்கா், மாநில திட்டக்குழு உறுப்பினா் செயலா் எஸ். சுதா, ஆா்.எம்.கே.குழும கல்லூரி முதல்வா் கே.கே.சிவஞான பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.