கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
கரூரில் தனியார் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயமடைந்தனர்.
கரூரில் தனியார் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியனையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் கல்லூரிப் பேருந்து திடீரென தண்டவாளத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வழியாக புலியூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் 18 மாணவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
summary