முகப்பு
தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு சீா்கேடுக்கு திமுக அரசே காரணம்: அன்புமணி

சட்டம்-ஒழுங்கு சீா்கேடுக்கு திமுக அரசே காரணம்: அன்புமணி

Updated On : 21 மார்ச், 2026 at 9:31 PM
அன்புமணி - படம் - யூடியூப் / நரேந்திர மோடி
பகிர்:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் சீா்கெட்டதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே, ஜாமீனில் வெளியே வந்த ஒரு கொடூரனை காவல்​துறையினா் கைது செய்துள்ளனா். மன்னிக்கவே முடியாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனா். அவா்களைக் கண்காணிக்கவோ, அவா்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் சீா்கெட்டதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என தெரிவித்துள்ளாா் அன்புமணி.