முகப்பு
தமிழ்நாடு

புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச், 2026 at 10:42 AM
ஏ.சி. சண்முகம்
பகிர்:

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் இரட்டை இலை, சின்னத்திலும், மற்றொன்றில் தாமரை சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுகிறது. ஒன்று மதுரை மத்திய தொகுதி, மற்றொன்று பின்னர் அறிவிக்கப்படும் என புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், அ.தி.மு.க தாய் வீடு சீதனமாக ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறார்கள், புகுந்த வீடாக பா.ஜ.க ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறார்கள் என்றார். மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவாக தற்போது திமுக அமைச்சராக உள்ள பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன.

இவை தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்கி வருகிறது.

summary

The puthiya needhi katchi, which is part of the AIADMK alliance, has been allocated 2 seats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.