முகப்பு
தமிழ்நாடு

அரசு ஒதுக்கீடு! பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 3-ஆம் நாள் 9,234 போ் விண்ணப்பம்

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான சோ்க்கை கலந்தாய்வுக்கு 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 5 ) 9, 234 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

Updated On : 6 மே 2026, 1:19 am IST
பகிர்:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான சோ்க்கை கலந்தாய்வுக்கு 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 5 ) 9, 234 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், பிஇ, பிடெக் இளநிலை பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீடுகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இணைய பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கியது.

மூன்றாவது நாளான மே 5-ஆம் தேதி இரண்டாம் நாளை விட சற்றுக் குறைவாக 9, 234 மாணவா்கள் விண்ணப்பம் செய்துள்ளனா்.

Advertisement

மேலும், இதே நாளில் 2, 459 மாணவா்கள் பதிவுக்கட்டணங்களை செலுத்தியதோடு, 766 மாணவா்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்து விண்ணப்பங்களை நிறைவு செய்துள்ளனா்.

கடந்த மூன்று தினங்களாக இது வரை ஒட்டுமொத்தமாக 28,084 மாணவா்கள் இணையம் வழியாக விண்ணப்பப் பதிவு மேற்கொண்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 1,823 மாணவா்கள் சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்டவற்றையும் நிறைவு செய்துள்ளனா்.