அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!
அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர் பற்றி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெகவினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசம் என்று சொன்னால் பலரும் உடனே சொல்லிவிடுவார்கள். திருப்பத்தூர் தொகுதிதான் என்று.
திருப்பத்தூரில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று அரசியல் கட்சிகள் சொல்லும்போது அதன் முக்கியத்துவம் புரிந்திருக்காது. ஆனால், திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது நிச்சயம் புரிந்திருக்கும் அதன் வலிமை.
Advertisement
பெரிய கருப்பன் 83374 வாக்குகள் பெற்ற நிலையில், ஒரு வாக்கு அதிகம் பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்.
அடுத்து அதிகபட்ச வாக்குகள் வித்தியாசம் என்றால் அது சோளிங்கநல்லூர் தொகுதி. இங்கு தவெக வேட்பாளர் சவரணன், 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவர் பெற்ற மொத்த வாக்குகள் 2,20,382 ஆகும்.
ஒட்டுமெத்த தமிழகத்திலும் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 98110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிகபட்ச வித்தியாசமாக இடம்பிடித்துள்ளார்.
தமிழகத்தில் 10 இடங்கள் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு அமைந்திருக்கிறது.
கிட்டத்தட்ட 17 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தவெக தோல்வியை தழுவியிருக்கிறது. திருக்கோவிலூர், விக்ரவாண்டி, குளித்தலை, கோவில்பட்டி போன்றவை ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர், புதுக்கோட்டை, திருமயம் போன்ற தொகுதிகளிலும் இரண்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் தவெக தோல்வியடைந்திருக்கிறது.
திருவண்ணாமலை, ஏற்காடு, விருத்தாச்சலம், கோவில்பட்டி, கீழ்வேளுர் ஆகிய தொகுதிளில் 2500 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். தவெக இந்த தொகுதிகளில் ஏதேனும் பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.