விஜய் உடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? யார் யார் இடம்பெறுவர்?
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும்போது அமைச்சரவையும் அவருடன் பதவியேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், ஒரு சில நாள்களில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்க விருக்கும் நிலையில், நாளை அவர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.
ஏற்னவே, ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் விஜய் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement