முகப்பு
தமிழ்நாடு

கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு...

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு - X
பகிர்:

தவெகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸின் ஆதரவைக் கோரிய நிலையில் காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது.

வரும் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

Advertisement

இதையடுத்து தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய்யைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவுக் கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

summary

TVK congress Alliance Confirmed: Congress Functionaries Meet with Vijay in panaiyur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.