முக்கிய ஆலோசனை! இபிஎஸ் இல்லத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்!
அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது குறித்து...
சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இன்று(மே 10) காலை 9 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சனிக்கிழமை காலை சென்னைக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனா். இதில், தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றுப்பட்டது.
அதோடு, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் இருவேறு கருத்துகள் நிலவியதாகவும் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தனித்தனியாக அவர்களது வீடுகளில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அல்லது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை தேர்வு செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பப்பட்டது. இதனால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு நிலவியது.
இந்தச் சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
A meeting of the party's district secretaries is being held at the residence of AIADMK General Secretary Edappadi Palaniswami in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.