முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் அடுத்து என்ன? இபிஎஸ் தலைமையில் நாளை மாவட்டச் செயலர்கள் கூட்டம்!

இபிஎஸ் தலைமையில் நாளை மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறித்து...

எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்.
பகிர்:

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் நாளை(மே 19) காலை 9 மணிக்கு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு தரப்பாக பிரிந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நாளை அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் 47 போ் வெற்றிபெற்றனர். தொடர்ந்து, கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையிலும் இரண்டு அணிகள் உருவாகியுள்ளன.

Advertisement

Advertisement

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்கள் 25 பேர் ஆதரித்தும், 22 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களை அவர்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has announced that a meeting of the party's district secretaries will be held tomorrow (May 19) at 9:00 AM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments