திருவண்ணாமலை நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!
தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் தொடா்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு,மேற்கு மாவட்டங்களின் நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூலை 4) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி, இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனும், பிற்பகலில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், அதற்கான பணிகளை தற்போதே மேற்கொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
AIADMK General Secretary Edappadi K. Palaniswami is holding intensive consultations with the party's functionaries from Tiruvannamalai district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.