FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் உதயநிதியின் காரில் ஏறிய இபிஎஸ்? காரணம் என்ன?

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:12 pm IST
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குத் தனித்தனியாகப் பேட்டியளித்த இபிஎஸ், உதயநிதி - ANI
பகிர்:

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றார்.

2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று (ஆக. 6) தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் உரையாற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பின்னர், எடப்பாடி பழனிசாமி தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முயன்றார். இதனைத் தொடர்ந்து, தான் ஏற முயன்ற கார் தன்னுடையது அல்ல என உணர்ந்த இபிஎஸ், பின்னர் தன்னுடைய காரில் ஏறிச் சென்றார்.

இதேபோல, கடந்த திமுக ஆட்சியிலும் ஒருமுறை உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முயன்றார். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய காரை எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

summary

Did ADMK Leader Edappadi Palaniswami get into LoP Udhayanidhi Stalin's car again?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments