FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரீல்ஸ் போடுவது யார்? இபிஎஸ் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

தவெக அரசு ரீல்ஸ் மட்டுமே போடுவதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துப் பேசியது குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:27 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தவெக அரசு ரீல்ஸ் மட்டுமே போடுவதாக விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துப் பேசியுள்ளார்.

ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதுமே தவெக அரசின் 100 நாள் சாதனை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்தைக் குறிப்பிட்டு, செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, தவெக அரசு ரீல்ஸ் போடுவதாய் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் ரீல்ஸ் போடுகின்றனர்? மக்கள்தான் ரீல்ஸ் போடுகின்றனர். மாற்றம் வர வேண்டும் என ரீல்ஸ் போட்டது, மக்கள். ஏற்றம் வர வேண்டும் என சமூக ஊடகங்களில் எழுதியதும் மக்களே.

Advertisement

Advertisement

மன்னராட்சியைப்போல ஒரே குடும்பம் மட்டும் மகிழ்ச்சியடையக் கூடாது, ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியடைய வேண்டும் என நினைத்தவர்கள் மக்கள்.

முதல்வர் சத்தமில்லாமல் சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார். 717 டாஸ்மாக் கடைகளை மூடியதிலிருந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியது வரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிப்பொழுதும் பல்வேறு சாதனைகளைச் செய்து ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும் என முதன்முறையாக சாமானிய மக்களிடம் எண்ணம் வந்திருக்கிறது. இதுதான் மாபெரும் சாதனை. இது தொடரும் என்று தெரிவித்தார்.

summary

Minister Rajmohan responds to ADMK Leader Edappadi Palaniswami's criticism that the TVK government is merely making 'Reels'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments