வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? சி.வி. சண்முகம்
சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ சி.வி.சண்முகம் பேட்டி பற்றி....
தேர்தலில் வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? என எம்எல்ஏ சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலராக பொறுப்பேற்றபின் ஒரு தேர்தலில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை. சட்டப்பேரவை, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் எதிலும் பொதுச்செயலரால் வெல்ல முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் சொந்த செல்வாக்கில்தான் 47 தொகுதிகளில் வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.
47 தொகுதிகளில் மட்டுமே அவருக்கு செல்வாக்கு என்றால், மற்ற தொகுதியில் அவருக்கு செல்வாக்கில்லை என்கிறாரா? சொந்த மாவட்டமான சேலத்தில் 7 தொகுதியில் ஏன் பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை? வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம், தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் தென் மாவட்டம் பூஜ்ஜியம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அதிமுக முழுமையாக தோல்வியடைந்துள்ளது. கூட்டணியில் பாமக இருந்ததால் வட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் அதிமுக வென்றது. தோல்விக்குப் பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்துள்ளார்கள். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.
அதிமுக தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமியை ராஜிநாமா செய்யச் சொன்னோமா?அதிமுக பொதுச்செயலராக அவரே இருக்கட்டும், தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவித்தார்.
Is Edappadi Palaniswami the reason if we win, but District Secretaries the reason if we lose? — AIADMK leader C.V. Shanmugam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.