செப். 16-ல் தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம்! இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோனை!
செப். 16-ல் தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறித்து...
இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோனை மேற்கொள்ள, தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம் செப். 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் வரும் செப். 16 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமைக் கழகம்) நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
அன்று கட்சியின் 22 ஆம் ஆண்டு துவக்க நாள் மற்றும் வர இருக்கும் இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோனைகள் நடக்க இருப்பதால், அனைத்து மாவட்டச் செயலர்களும் தவறாமல் இந்த ஆலோனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் அக். 6 ஆம் தேதி இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
A meeting of DMDK district secretaries is scheduled to be held on September 16 to hold key consultations regarding the by-election.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.