FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜெம் வீரமணி வழக்கு! ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்: இபிஎஸ்

ஜெம் வீரமணி வழக்கில் எந்தவித பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியது குறித்து...

24 செப்டம்பர் 2026, 4:29 pm IST
ஜெம் வீரமணி | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

ஜெம் வீரமணி வழக்கில் எந்தவித பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, "ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்குநாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

Advertisement

Advertisement

இதுபோன்ற தீவிரமான, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித அழுத்தமுமின்றி கையாள வேண்டும்.

தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கியுள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.

பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்தவொரு இடமும் அளிக்க கூடாது.

இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

summary

Edappadi Palaniswami urges the government to take action in the GEM Veeramani case without any partiality

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments