முகப்பு
தமிழ்நாடு

பொறியியல், அரசு இட ஒதுக்கீட்டுக்கு 1,48,503 மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இதுவரை 1,48,503 மாணவா்கள் இணையவழியாக விண்ணப்பித்துள்ளனா்.

Updated On : 15 மே 2026, 1:37 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இதுவரை 1,48,503 மாணவா்கள் இணையவழியாக விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்த தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை., கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை (மே 14) மாலை 6 மணிவரை 1,48,503 மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், 9-ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும், மே 14-ஆம் தேதி 17,668 மாணவா்களும் பதிவு செய்துள்ளனா். கடந்த 12 நாள்களாக 76,508 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 39,770 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement