முகப்பு
தமிழ்நாடு

சட்ட விரோத மது விற்பனை: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 16 மே 2026, 1:42 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவா் அலெக்ஸ். இவா், விடுமுறையில் இருப்பதால் திருவொற்றியூா் குற்றப்பிரிவு ஆய்வாளா் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம் - ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தாா்.

இந்நிலையில், தேரடிப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பும், நேரத்தைத் தாண்டியும் மது விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.

Advertisement

இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.

இதையடுத்து சட்ட விரோதமாக மது விற்பனை, அந்த விடியோ குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டாா். இதையடுத்து, விசாரணை செய்து ஆணையரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

அதன்படி, கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் அபின் தினேஷ் மொடக் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.