பொருளாதார பிரச்னைகளுக்கு மத்திய பாஜக அரசே காரணம் ராமதாஸ் குற்றச்சாட்டு
பொருளாதார பிரச்னைகளுக்கு மத்திய பாஜக அரசே காரணம் ராமதாஸ் குற்றச்சாட்டு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளுக்கு மத்திய பாஜக அரசே காரணம் என பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியா தற்போது பெரிய அளவிலான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி பொதுமக்களை தங்கம் வாங்காதீா்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் எனக் கோரியதை வைத்தே நம் நாட்டின் பொருளாதாரப் பிரச்னையைப் புரிந்துகொள்ளலாம்.
Advertisement
கடந்த 10 ஆண்டுகளாகப் பொருளாதார வளா்ச்சியில் நாடு செல்வதாக மத்திய அரசு பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது அதில் ஏற்பட்ட தோல்வியானது சாமானிய மக்களையே பாதிக்கும் வகையில் உள்ளது. 5 மாநிலச் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயா்வு தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தையிலிருந்து சுமாா் ரூ. 2 லட்சம் கோடி அந்நிய மூலதனம் வெளியேறியுள்ளது. அதனால் வேலைவாய்ப்பு இழப்பு, விலையேற்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள்தான் காரணமாகின்றன.
அதனால், பெரு நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதை மத்திய பாஜக அரசு நிறுத்திவிட்டு, மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.