டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்
டாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்த சென்னை காவல் ஆணையர்.
டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
சென்னையில் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும். எஃப்எல்2 மற்றும் எஃப்எல்3 கடைகள் முறையே இரவு 10 மற்றும் 12 மணிக்குள் மூட வேண்டும். இவற்றை காவல் துறை அதிகாரிகள் கண்காணித்து, புகைப்படங்களை குழுவில் பதிவிட வேண்டும்.
டாஸ்மாக் கடைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்கள், நேரத்தைத் தவிர, வேறு எங்கும் விற்பனை செய்யக்கூடாது.
90 நாள்களுக்கு மேல் கொலை வழக்குகள் விசாரணையில் இருக்கக் கூடாது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
புகார்களின் மீது தாமதமின்றி சிஎஸ்ஆர்/எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். உத்தரவுகளைக் கடைபிடித்து, திறமையுடன் பணியாற்ற வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Chennai Police Commissioner Abin Dinesh Modak has ordered that TASMAC shops be closed by 10 PM.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.