முகப்பு
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி மீதான வழக்கைத் தொடர அனுமதி கோரி அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்

Updated On : 19 மே 2026, 5:09 am IST
செந்தில்பாலாஜி - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மீதான வழக்கில், மீண்டும் விசாரணையை தொடங்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2011 அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. பின்னா், 2024 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மாநில அரசின் அனுமதி கிடைக்காததால், வழக்கு விசாரணை தொடங்காமல் நிலுவையில் உள்ளது.

Advertisement

தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் விசாரணையை தொடங்க அனுமதி கோரி தலைமைச் செயலா் எம்.சாய்குமாருக்கு அமலாக்கத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.