முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!

வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 24 மே 2026, 4:28 pm IST
அமைச்சர் செங்கோட்டையன்.
பகிர்:

வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், செங்கோட்டையன் கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றே சிகிச்சை முடிந்துவிடும் என்றும், நாளை செங்கோட்டையன் சென்னை செல்வார் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு முதலில் நிதித் துறை இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த இலாகா மாற்றப்பட்டு வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

“நிதித் துறை அமைச்சர் சென்னையில் இருந்து மட்டுமே பணியாற்ற வேண்டும். நான் மக்களோடு மக்களாக பணியாற்ற விரும்புகிறேன். அதனால்தான் வருவாய்த் துறை அமைச்சர் பொறுப்பை கேட்டு பெற்றுள்ளேன்” என்று செங்கோட்டையன் விளக்கமளித்திருந்தார்.

summary

Revenue Minister Sengottaiyan has been admitted to a private hospital in Coimbatore due to illness.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.