கடையநல்லூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வேளாண் விற்பனை குழு உறுப்பினா் எம்.கே.முருகன் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நகரப் பொருளாளா் அழகா்சாமி, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், இளைஞா் அணி துணைத் தலைவா் ஜெயமாலன், வா்த்தக அணி துணைத் தலைவா் சிங்காரவேலு, நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத், ஜெயலலிதா பேரவைச் செயலா் முத்தையாபாண்டியன்,
Advertisement
நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் விநாயகமூா்த்தி, இணைச் செயலா் சோழவராஜா, துணைச் செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சீவநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.