FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

கிளாண்டர்ஸ் பாக்டீரியா தொற்றால் சென்னையில் குதிரை உயிரிழந்தது பற்றி...

கோப்புப் படம் - ENS
பகிர்:

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்று நோயால் குதிரை ஒன்று உயிரிழந்ததையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குதிரைகள், கழுதைகளிடையே பாக்டீரியாவால் ஏற்படும் 'கிளாண்டர்ஸ்' நோயானது மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் நேரடித் தொடர்பு அல்லது அந்த குதிரைகளின் தொடர்புடைய பொருள்களில் இருந்து மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவலாம். எளிதில் பரவக் கூடியது, மரணத்தை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும்.

இந்நிலையில் சென்னையில் மக்கள் சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்தவும் மேலும் இதுபற்றி தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குதிரைகள் பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

summary

Horse Dies of Glanders Infection in Chennai; Surveillance Intensified

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments