முகப்பு
தென்காசி

தென்காசி தொகுதியில் சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:01 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:11 PM

தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல்அலுவலரும் ஆட்சியருமான ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப்பாா்வையாளா் டோபேஸ்வா் வா்மா முன்னிலை வகித்தாா்.

கணினி மூலம் இரண்டாவது சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும்பணி நடைபெற்றது. கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

Advertisement