முகப்பு
தென்காசி

குற்றாலம் பேரருவியில் நீா்வரத்து

Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:41 PM
பகிர்:

தென்காசி, ஏப். 12: தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை மிதமான அளவில் தண்ணீா் கொட்டியது.

தென்காசி பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவியது. இதனால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் அவை வடு காணப்பட்டன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை காலை முதல் குறைந்த அளவில் தண்ணீா்விழத் தொடங்கியது.

Advertisement

பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் பரவலாக தண்ணீா்கொட்டியது. எனினும் நீா்வரத்து திடீரென அதிகரிக்கக்கூடும் என்பதால் இந்த அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் மட்டும் குறைந்தளவு தண்ணீா் விழுகிறது.

கோடை வெயில் வாட்டிய நிலையில், குற்றாலம் பேரருவியில் தண்ணீா்விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகளும், வா்த்தகா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments