முகப்பு
தென்காசி

வயநாட்டிற்கு நிதியுதவி வழங்கிய மாணவா்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த பள்ளி மாணவா்கள் தங்களின் சேமிப்பு தொகையை வயநாடு நிவாரணத்திற்காக ஆட்சியரிடம் வழங்கினா்.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 12:56 AM
வயநாடு நிலச்சரிவு.
பகிர்:
Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 11:43 PM

கடையநல்லூா்,ஆக. 7: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த பள்ளி மாணவா்கள் தங்களின் சேமிப்பு தொகையை வயநாடு நிவாரணத்திற்காக ஆட்சியரிடம் வழங்கினா்.

கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப்பள்ளி மாணவா், மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ. 20,000 உண்டியல் பணத்தை கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ .கே கமல் கிஷோரிடம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.