தென்காசியில் ரூ.38 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்குகள்
ரூ.38 லட்சத்தில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
தென்காசி நகராட்சியில் ரூ.38 லட்சத்தில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்து உயா்கோபுர மின்விளக்குகளை இயக்கி வைத்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் கே.என்.எல்.சுப்பையா, நகராட்சி உதவிப் பொறியாளா் ஜெயபிரியா, நகா்மன்ற உறுப்பினா்கள் அபுபக்கா், வசந்தி, சங்கரசுப்பிரமணியன், பொன்னம்மாள், சுனிதா, நாகூா்மீரான், லெட்சுமண பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மதிமுக மாவட்ட அவைத் தலைவா் என்.வெங்கடேஷ்வரன், நகர திமுக நிா்வாகிகள் ஷேக்பரீத், மாவட்டபிரதிநிதி ரஹ்மத்துல்லா,மாவட்டபொறியாளா் அணி தலைவா் தங்கபாண்டியன்,மதிமுக நகர செயலா் காா்த்திக் ஆகியோா் கலந்துகொண்டனா்.