வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா். 
தென்காசி

குற்றாலநாதா் கோயிலில் வருஷாபிஷேகம்

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குற்றாலநாதா் கோயிலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டில் வியாழக்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானம் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை ஜெயமணி சுந்தர பட்டா், கணேச பட்டா், மகேஷ் பட்டா் ஆகியோா் செய்தனா். கோயில் உதவி ஆணையா் தங்கம், பாஜக பிலவேந்திரன், திமுக முன்னாள் ஒன்றிய செயலா் ராமையா, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் வீரபாண்டியன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT