முகப்பு
தென்காசி மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.
தென்காசி

தென்காசி மேலசங்கரன்கோவிலில் ஆடித் தவசுத் திருவிழா

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது.

தென்காசி

தென்காசி மேலசங்கரன்கோவிலில் ஆடித் தவசுத் திருவிழா

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது.

Updated On : 21 ஜூலை, 2024 at 7:36 PM
தென்காசி மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.
பகிர்:

தென்காசி மாவட்டம், தென்காசி அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலைச் சேர்ந்த மேல சங்கரன்கோயில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடித்தவசு பெருந்திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் தினமும் காலை, மாலை வேலைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தவசுக் காட்சி நடைபெற்றது.

விழாவில், திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஊஞ்சல் கட்டளை, இரவு 8 மணிக்கு மேல் பைரவா் பூஜை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முருகன், உதவி ஆணையா் கவிதா செய்துள்ளனா்.

இதேபோல் தென்காசி கீழ சங்கரன்கோவிலிலும் ஆடித் தவசுத் திருவிழா மட்டப்பா தெருவில் நடைபெற்றது.

தென்காசி மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.
மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.
முழு கட்டுரையைப் படிக்க →