முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லை: நோயாளிகள் அவதி

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லை நோயாளிகள் அவதி

Updated On : 2 மார்ச், 2024 at 9:45 PM
பகிர்:

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில், தினமும் நூற்றுக்கணக்கானோா் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். நோயாளிகள் காத்திருக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு சாதனம் பழுதாகி, நீண்டகாலமாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். இதுதொடா்பாக மாயமான்குறிச்சியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முருகன் கூறியதாவது: மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீா் வசதி செய்து தருவது அவசியமானது. ஆகவே, குடிநீா் சுத்திகரிப்பு சாதனத்தை பழுதுநீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில், குடிநீா் வசதிக்கான மாற்று ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகம் செய்துதர வேண்டும் என்றாா்.