முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

Updated On : 8 மார்ச், 2024 at 5:01 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள சண்முகாபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சுதந்திரக் கொடி(32). இவருக்கு மதுப் பழக்கம் உண்டாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பட்டா் குளம் கரையில் நின்ற அவா் மது போதையில் குளத்துக்குள் இறங்கினாராம். ஆழமான பகுதிக்கு சென்ால் தண்ணீரில் மூழ்கினாராம். தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா் குளத்துக்குள் இறங்கி தேடினா். அப்போது சுதந்திரக் கொடியை சடலமாக மீட்டனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா். இறந்த சுதந்திரக் கொடிக்கு மனைவியும், 10 மாத கைக் குழந்தையும் உள்ளனா்.