வாசுதேவநல்லூா் ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் தின விழா
தென்காசிவாசுதேவநல்லூா் ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் தின விழா
வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஒன்றியக் குழுத் தலைவா் பொன்.முத்தையாபாண்டியன் கேக் வெட்டி பெண் ஊழியா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா். இதில், வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சந்திரமோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் முனியராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துப்பாண்டி, அருள்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.