திருவாரூர்

தொடக்கப் பள்ளியின் நூறாவதுஆண்டு விழா

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் அருகே கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 100-ஆவது ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடந்த 1926-இல் கொட்டாரக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இதையொட்டி 100-ஆவது ஆண்டு விழா தலைமை ஆசிரியா் கவிதா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலா் பழனிவேல், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அறிவழகன், சுமதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

முன்னதாக, மேளதாளம் முழங்க சிறப்பு அழைப்பாளா்கள் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா் (படம்).

நிகழ்வில் 1969, 1976, 1995, 2008-ஆம் ஆண்டுகளில் கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள், காவல்துறையிலும், பள்ளிக்கல்வித்துறையிலும், பேச்சாளா்களாகவும் செயல்படுவதாகத் தெரிவித்தனா். தற்போதைய மாணவ, மாணவிகள் பள்ளியின் சிறப்பு குறித்து தனித்திறமைகளை வெளிப்படுத்திப் பேசினா்.

100-ஆவது ஆண்டுவிழாவை, அப்பகுதி மக்கள், முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் இணைந்து இன்னிசை நிகழ்ச்சியுடன் கொண்டாடினா்.

காதலா் தினம், சிவராத்திரி: ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

திருச்சியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம்: மத்திய அமைச்சரிடம் மனு

தேசியவாத காங்கிரஸ் தலைவராக விரைவில் சுநேத்ரா பதவியேற்பார்: பிரஃபுல் படேல் தகவல்!

பாத்திமா கல்லூரியில் வினாடி-வினா போட்டி

SCROLL FOR NEXT