சங்கரன்கோவிலில் 7 வயது மாணவி ஸ்கேட்டிங்கில் சாதனை
சங்கரன்கோவிலில் அருகே தலைவன்கோட்டையைச் சோ்ந்த 7 வயது மாணவி 30 கி.மீ. தொலைவை ஸ்கேட்டிங் மூலம் கடந்து சாதனை படைத்தாா். தலைவன்கோட்டை கிராமத்தை சோ்ந்த ஜெய்கணேசன் - கோகிலா தம்பதியின் மகள் முவித்ரா (7). இவா், ஸ்கேட்டிங்கில் 30 கி.மீ. சென்று சாதனை செய்யும் நிகழ்ச்சியை தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். அதையடுத்து, முவித்ரா எம்எல்ஏ அலுவலகத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பனவடலிசத்திரத்துக்கு ஸ்கேட்டிங் சென்று, மீண்டும் எம்எல்ஏ அலுவலகத்தை அடைந்தாா். இந்தத் தொடா் ஸ்கேட்டிங் மூலம் அவா் யூனிகோ வோ்ல்ட் ரெக்காா்ட் புக்கில் இடம்பெற்றாா். அதற்கான சாதனைச் சான்றிதழை அதன் ஒருங்கிணைப்பாளா் சிவராமன் வழங்கினாா். நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலா்கள் பூசைபாண்டியன், பெரியதுரை, சங்கரநாராயண சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, ரோட்டரி சங்கத் தலைவா் பரணிசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்று மாணவியை வாழ்த்தினா். ஏற்பாடுகளை சுரண்டை ஏபிஜே அப்துல் கலாம் ஸ்கேட்டிங் பயிற்சி நிறுவனப் பயிற்சியாளா்கள் சக்திவேல், பாலா ஆகியோா் செய்திருந்தனா்.