ஆலங்குளத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்
Updated On : 22 மார்ச், 2024 at 7:35 PM
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் 3 லட்சம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. ஆலங்குளம் பேருந்து நிலையத்தில், தோ்தல் அலுவலரும் வட்டாட்சியருமான கிருஷ்ணவேல் முதல் கையொப்பமிட்டு இயக்கத்தைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள் கையொப்பமிட்டனா். பின்னா், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து வாக்காளா் உறுதிமொழி எடுத்தனா். இதில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிறிஸ்டி, காவல் ஆய்வாளா் ஆா். மாதவன், பேரூராட்சி உதவியாளா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.